In Briefதொழினுட்பவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் மாண்புமிகு பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் புதிய HD தயாரிப்பு ஸ்டூடியோ, AI ஆய்வகம் மற்றும் UoVT பசுமைக் கொள்கையை திறந்து வைத்தார்.
2026 மே 26 அன்று ரத்மலானையில் அமைந்துள்ள தொழினுட்பவியல் பல்கலைக்கழகத்திற்கு மாண்புமிகு பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் விஜயம் செய்தது பல்கலைக்கழக வரலாற்றில் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
நிகழ்வின் போது புதிய உயர் தெளிவுத்திறன் (HD) தயாரிப்பு ஸ்டூடியோ மற்றும் பாட்காஸ்ட் நிலையம், நவீன செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகம் மற்றும் பாலின சமத்துவ மையம் (CGEE) ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.
தொழிற்கல்வி எதிர்காலம் குறித்த நேரலை கலந்துரையாடலில் தொழிற்கல்வி துணை அமைச்சர் நளின் ஹேவகே, அமைச்சின் செயலாளர், துணைவேந்தர் பேராசிரியர் K.M.G. பிரசன்ன பிரேமதாச மற்றும் பீடாதிபதி திலந்த ரத்நாயக்க ஆகியோருடன் பிரதமர் கலந்து கொண்டார்.
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியை வலுப்படுத்துவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பிரதமர் வலியுறுத்தினார்.
நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் UoVT பசுமைக் கொள்கையும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
சமூக பொறுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக Ditwa அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு mடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
UoVT மாணவர்கள் தயாரித்த நிலைத்தன்மை வாய்ந்த தயாரிப்புகள் அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பை துணைவேந்தர் பிரதமருக்கு வழங்கினார்.
உலகத் தரத்திலான கல்வி நிறுவமாக UoVT முன்னேற தயாராக இருப்பதாக துணைவேந்தர் பேராசிரியர் K.M.G. பிரசன்ன பிரேமதாச தெரிவித்தார்.
காட்சி சிறப்பம்சங்கள்




























